செவ்வாய், 26 ஜனவரி, 2021

குடியரசு தினவிழா -2021

 குறிப்பேடு ஊ.ஒ.தொடக்கப் பள்ளியில் இன்று இந்திய குடியரசு தினவிழா சிறப்பாகவும், மிக எளிமையாகவும் கொண்டாடப் பட்டது. விழாவிற்கு பள்ளி தலைமையாசிரியை திருமதி.இரா.நிறைமதி அவர்கள் தலைமை வகித்தார். ஊராட்சி மன்றத் தலைவர் தேசியக் கொடியை ஏற்றி சிறப்பு செய்தார். விழாவில் பள்ளி மேலாண்மைக் குழு உறுப்பினர்கள், ஊராட்சி மன்ற உறுப்பினர்கள் மற்றும் பெற்றோர் பொதுமக்கள் கலந்துகொண்டு சிறப்பித்தனர். விழா ஏற்பாடுகளை பள்ளி உதவியாசிரியர் திரு. இரா.சங்கர் அவர்கள் செய்திருந்தார். குறிப்பேடு காலனியைச் சேர்ந்த திரு. கார்த்திக், திரு.ஐயப்பன்,

வியாழன், 21 பிப்ரவரி, 2019

குறிப்பேடு தொடக்கப்பள்ளியில் இன்றி 22/02/2019 வெள்ளிக்கிழமை கல்விச்சீர் வழங்கும் விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது..




















திங்கள், 11 டிசம்பர், 2017

குறிப்பேடு ஊ.ஒ.தொ.பள்ளியில் இன்று பள்ளி மாணவர் (நமது அரசாங்கம், வகுப்பு 5) தலைவர் தேர்தல் -2017  நடத்தப்பட்டது. பள்ளி தலைமையாசிரியை திருமதி.இரா.நிறைமதி அவர்கள் பள்ளி தலைமை தேர்தல் அலுவலர் பொறுப்பேற்று கடந்த 07/12/2017 அன்று தேர்தல் அறிவிப்பை வெளியிட்டார். வாக்குச்சாவடி அலுவலராக உ.ஆ. திரு. இரா.சங்கர் அவர்கள் நியமிக்கப்பட்டார். முன்னதாக 8/12/2017 அன்று வேட்பு மனு தாக்கல் துவங்கியது. ஐந்து பேர் வேட்புமனு தாக்கல் செய்தனர். அவர்களின் மனுக்கள் பரிசீலிக்கப்பட்டு ஏற்றுக்கொள்ளப் பட்டது. அனைவருக்கும் குலுக்கல் முறையில் சின்னங்கள் ஒதுக்கப்பட்டது. இன்று காலை 11.00 மணிக்கு வாக்குப்பதிவு துவங்கியது. தேர்தல் பார்வையாளராக நமது வந்தவாசி கூடுதல் உ.தொ.கல்வி அலுவலர் திரு.இராம்மூர்த்தி அவர்கள் கலந்துகொண்டு சிறப்பித்தார். அவர் மாணவர்களுக்கு வாக்களிக்கும் முறைபற்றி விளக்கமாக கூறினார். பின்னர்மாணவ, மாணவிகள் வரிசையாக வந்து வாக்களித்தனர். முதலில் வாக்காளர் தம் பெயர் வாசிக்கப்பட்டதும் வந்து தங்கள் பள்ளி அடையாள அட்டையைக் காண்பித்தனர். பின்னர் வாக்குப்பதிவு புத்தகம் 17 ஏ ல் தங்கள் பெயர் எழுதி கையொப்பமிட்டனர். அதன்பின் அவர்கள் கைவிரலில் அழியாத மை வைக்கப்பட்டது. பின்னர் வாக்குச்சீட்டில் தங்கள் கையொப்பமிட்டு, தனியாகச் சென்று முத்திரை வைத்தபின் வாக்குப் பெட்டியில் தங்கள் வாக்கைச் செலுத்திவிட்டு வந்தனர். தேர்தல் பார்வையாளர் வாக்குப்பதிவை உடனிருந்து கண்காணித்தார். வாக்குப்பதிவு அமைதியான முறையில் நடந்து முடிந்த்தும் வாக்குகள் எண்ணும் பணி துவங்கியது. வாக்குப்பெட் வேட்பாளர்கள் முன்னிலையில் பிரிக்கப்பட்டு வாக்குகள் பிரித்து எண்ணப்பட்டது.பின்னர் முடிவுகளை திரு. இராம்மூர்த்தி ஏ.இ.ஓ. அவர்கள் அறிவித்தார். 5 ம் வகுப்பு மாணவி ம.சந்தியா ( மோட்டார்சைக்கிள் சின்னம்) 15 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டார். கு. அஸ்வினி ( கடிகாரம்) 13 வாக்குகள் பெற்று துணைத்தலைவர் ஆனார். ச.லோகநாதன் ( பூட்டு) 11 வாக்குகள் பெற்று 3 ம் இடம் பெற்றார். வெற்றிபெற்றவர்களுக்கு உடனடியாக பதவிப் பிரமானம் நமது ஏ.இ.ஓ. அவர்கள் செய்வித்தார்..
தேர்தல் முடிவுகள்:
மொத்தவாக்குகள் 44
பதிவானவை: 44
மோட்டார்சைக்கிள்:15
கடிகாரம்:13
பூட்டு: 11
கணினி:2
பல்பு:2
நோட்டா: 1
தேர்தலில் சிறப்பு பார்வையாளராக்க் கலந்துகொண்டு ஆலோசனைகள் வழங்கிச்சிறப்பித்த கூ.உ.தொ.கல்வி அலுவலர் திரு.இராம்மூர்த்தி ஐயா அவர்களுக்கு எங்கள் நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறோம்..
              இவண்
த.ஆ. மற்றும் ஆசிரியர்கள்
ஊ.ஒ.தோ.பள்ளி
குறிப்பேடு
வந்தவாசி வட்டம்.🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🇮🇳

புதன், 15 நவம்பர், 2017

வியாழன், 9 நவம்பர், 2017

குறிப்பேடு தொடக்கப்பள்ளியில் இன்று 9/11/2017 முற்பகல் நமது பண்பாடு மற்றும் கலாச்சாரத்தை வளர்க்கும் நோக்கில் பள்ளி அளவிலான கலைவிழா நடத்தப்பட்டது. த.ஆ. திருமதி.நிறைமதி அவர்கள் தலைமை தாங்கினார். மாறுவேடம், பாடல், நடனம், கதை கூறல், ஓவியம், கையெழுத்து, குழு நடனம், போன்ற பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டது. மாணவர்கள் மிகவும் உற்சாகத்துடன் கலந்து கொண்டனர்...வெற்றி பெற்ற மாணவர்களுக்குக் பரிசுகள் வழங்கப்பட்டது..உ.ஆ. சங்கர் அவர்கள் விழா ஏற்பாடுகளைச் செய்திருந்தார்.விழாவில் பெற்றோர் மற்றும் பொதுமக்கள் திரளாக கலந்துகொண்டனர்.