சனி, 20 ஆகஸ்ட், 2016

Dfc project done by our school students 2016

எங்கள் பள்ளி மாணவர்கள் Design for change project பற்றிய வீடியோ லிங்க்...
https://youtu.be/SlYdpgIShjY
இங்கே க்ளிக் செய்யவும்..

புதன், 25 மே, 2016

வியாழன், 7 ஏப்ரல், 2016

பள்ளி கிராமக் கல்விக்குழுக் கூட்டம்

எங்கள் பள்ளியில் 6/4/2016 அன்று கிராமக் கல்விக்குழு கூட்டம் மற்றும் பள்ளி மேலாண்மைக் குழு கூட்டம் நடைபெற்றது. இதில் தலைவர், பொதுமக்கள் கலந்துகொண்டணர். பள்ளி வளர்ச்சிக்கான திட்டமிடல் சார்ந்த கலந்துரையாடல் நடைபெற்றது..ஊராட்சி தலைவர் தன் சொந்த செலவில் R.O.system அமைத்து தருவதாக உறுதியளித்தார். பள்ளியில் smart class அமைக்கவும், டைல்ஸ் பதிக்கவும் நிதி திரட்ட ஒருமனதாக முடிவு செய்யப்பட்டது..ஏப்ரல் மாதமே பள்ளி அட்மிஷன் முடித்துவிட தீர்மானம் செய்யப்பட்டது...ஊராட்சி மன்றத் தலைவர் திரு. கோவிந்தம்மாள் நடராசர் அவர்களுக்கு பள்ளியின் சார்பில் பாராட்டுக்களையும் நன்றியையும் தெரிவித்துக் கொள்கிறோம்..



திங்கள், 28 மார்ச், 2016

பள்ளிச் சுற்றுலா

குறிப்பேடு ஊ.ஒ.தொடக்கப்பள்ளி 3,4, மற்றும் 5 ம் வகுப்பு மாணவ மாணவியர் நேற்று 26/03/2016 சனிக்கிழமையன்று சென்னை கிஷ்கிந்தா விளையாட்டு பூங்காவிற்கு சுற்றுலா சென்று வந்தோம். காலை 6 மணிக்கு சுற்றுலா வாகனம் பள்ளியிலிருந்து புறப்பட்டது. சுமார் 7.30 மணிக்கு திருமலை வையாவூர் கோயிலை அடைந்தோம். சுவாமி தரிசனம் செய்துவிட்டு காலை உணவை அங்கேயே முடித்தோம். பின்னர் 10.00 மணியளவில் கஷ்கிந்தா சென்றடைந்தோம். மாணவர்கள் மிக்க மகிழ்ச்சி யுடன் அனைத்து விளையாட்டு களையும் விளையாடி மகிழ்ந்தனர். மதிய உணவாக தயிர்சாதம் வழங்கப்பட்டது. பின்னர் நீர்விளையாட்டுஹளில் ஆரவாரத்துடன் கலந்துகொண்டனர்.சுனாமி உருவாக்கம் பிரமிப்பூட்டும்படி இருந்த்து. மாலை 6 மணிக்கு அங்கிருந்து புறப்பட்ட்டு 8.30 மணிக்கு இருப்பிடம் வந்துசேர்ந்தோம். குழந்தைகள் நாள் முழுதும் மகிழ்ச்சியை யாக இருந்தனர்.

ஞாயிறு, 27 மார்ச், 2016

26/03/2016 அன்று எங்கள் பள்ளி மாணர்கள் சென்னை கிஷ்கிந்தா சுற்றுலா சென்று வந்த காட்சிகள்...